நிறுத்தப்பட்ட பஸ்களால் பயணிகள் அவதி

Update: 2023-04-09 13:29 GMT

பரமத்தி வேலூரில் இருந்து நொய்யல் வழியாக கொடுமுடி, ஈரோடு, கோவை, திருப்பூர், பல்லடம், வெள்ளகோவில், பழனி, பரமத்தி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு ஏராளமான பஸ்கள் வந்து சென்று கொண்டிருந்தன. கொரோனா காலத்தில் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைந்த பிறகு தமிழக அரசு பஸ்களை இயக்க உத்தரவிட்டிருந்தது. அரசு பஸ்கள் மிகவும் குறைந்த அளவிலும், தனியார் பஸ்கள் ஒரு சில மட்டும் தொடர்ந்து இயங்கி வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு இந்த வழியாக பஸ்கள் செல்லாததால் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ் மூலம் பயணம் செய்யும் பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து துறை அதிகாரியிடம் இது குறித்து பல முறை புகார் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்