சாதார கட்டண பஸ்கள் இன்றி மக்கள் அவதி

Update: 2023-04-09 12:38 GMT

அரியலூர் மாவட்டம், வெற்றியூர், சாத்தமங்கலம், கல்லூர், முடிகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் தினமும் அரியலூர் மற்றும் தஞ்சாவூருக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் காலை, மாலை, இரவு நேரங்களில் செல்லும் பஸ்களில் பெரும்பாலானவை விரைவு பஸ்களாக செல்வதினால் மற்ற கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் சாதாரண கட்டணம் பஸ்களை கூடுதலாக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி