மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்கள்

Update: 2023-04-09 12:19 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி- விளாங்குடி அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கயர்லாபாத் (தேளூர்) போலீஸ் நிலையம். இந்த போலீஸ் நிலையத்திற்கு தினமும் தேளூர், கைகாட்டி, அஸ்தினாபுரம், குடிசல், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, மணலேரி என பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் புகார் கொடுக்க வருகின்றனர். இந்நிலையில் போலீஸ் நிலையம் முன்பாக செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் மின்னல் வேகத்தில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. குறிப்பாக சாலையைக் கடந்து போலீஸ் நிலையத்திற்கு உள்ளே வருவதற்கும், போலீஸ் நிலையம் வந்த பிறகு வெளியே செல்ல சாலையை கடப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கயர்லாபாத் போலீஸ் நிலையம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்