வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

Update: 2023-04-05 13:16 GMT
கரூர் சுங்க கேட்டில் இருந்து திருமாநிலையூர் வழியாக கரூருக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. திருமாநிலையூரில் இருந்து கரூருக்கும், கரூரில் இருந்து செல்லாண்டிபாளையம் செல்லும் வாகனங்களும் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியை கடந்து செல்கின்றன. இப்பகுதியில் வாகனங்கள் வேகமாக கடக்கும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்