காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் நான்கு சாலை சந்திப்பு மற்றும் தேரடி ஆகிய பகுதிகளில் தினந்தோறும் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாகி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அதிக அளவில் வருவதால் வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த வேண்டுகிறோம்.