போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-05 12:00 GMT

ஊட்டியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா ஒரு மாதமாக நடந்து வருகிறது. மேலும் தற்போது கோடை சீசன் தொடங்கி இருப்பதால் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதுதான், இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் ஆகும். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மார்க்கெட் பகுதியில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்