நாமக்கல் பிரதான சாலையில் கடைவீதி உள்ளது. இங்கு நகை கடைகள் மற்றும் ஜவுளி கடைகள் அதிக அளவில் உள்ளன. இந்த கடைகளுக்கு தினமும் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடைவீதியில் இருந்து பிரதான சாலைக்கு இருசக்கர வாகனங்களில் வருவோர் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே கடைவீதியும், பிரதான சாலையும் சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?