உத்தமபாளையம் நகரின் முக்கிய இடங்களான சாவடி பைபாஸ், கோட்டைமேடு, தேரடி போன்ற பகுதிகளில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் வாகனங்களை நிறுத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.