தர்மபுரி நகர பகுதியில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக வாகன போக்குவரத்து நெரிசல் கொண்ட நேதாஜி பைபாஸ் சாலையில் விதிமுறைகளை மீறி ஒரு வழி பாதையில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இதனால் சாலையில் எதிரே வேகமாக வரும் இருசக்கர வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்களா?