கிருஷ்ணகிரி- பெங்களூரு செல்லும் சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை வாகனங்கள் நெருங்கும் போது அதிவேகமாக வருகின்றன. சுங்கச்சாவடி அருகில் சாலையில் அதிக அளவில் லாரிகள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே சுங்கச்சாவடி அருகில் தாறுமாறாக நிறுத்தி செல்லும் லாரி டிரைவர்களை எச்சரித்து வாகனங்களை சாலையோரமாக நிறுத்திடவும், அப்பகுதியை போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.