கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. இதனால் கிருஷ்ணகிரி நகருக்குள் வரக்கூடிய இடத்தில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்தன. இந்த பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன. இதனால் கிருஷ்ணகிரி நகருக்குள் வருபவர்கள் சுற்றியே வரவேண்டிய நிலை உள்ளது.
அதே போல இரு சக்கர வாகன ஓட்டிகளும் ஆபத்தை உணராமல் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு தடுப்பு சுவரில் வழி ஏற்படுத்தி செல்கிறார்கள். எனவே தாமதமாக நடக்கும் மேம்பால கட்டுமான பணிகளை துரிதப்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.