திண்டுக்கல்லில் இருந்து அரவக்குறிச்சி பள்ளப்பட்டி வழியாக கரூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் தடாகோவில் பஸ் நிறுத்தத்தில் நின்று தான் செல்கிறது. அதேபோல கரூரிலிருந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வழியாக திண்டுக்கல் செல்லும் அனைத்து பஸ்களும் தடா கோவில் பஸ் நிறுத்தத்தில் நின்று தான் செல்கிறது. தடாகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் வேலை விஷயமாக கரூர், அரவக்குறிச்சி செல்பவர்களும் மற்றும் பள்ளி, கல்லூரியில் செல்லும் மாணவ- மாணவிகளும் தடாகோவில் பஸ் நிறுத்தம் சென்று பஸ் பிடித்து செல்கின்றனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் இதுவரை பயணியர் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வெயில், மழையில் நின்று பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.