கிருஷ்ணகிரியில் சாலைகளில் அதிக அளவில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வாகனங்களில் செல்லும் போது திடீரென கால்நடைகள் குறுக்கே வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.