போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2023-03-19 13:54 GMT

திருவாரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையில் கூட்டமாக படுத்துக்கொள்கின்றனர். இதனை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி தடுமாறி கீழே விழுகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி