போலீசார் நடவடிக்கை

Update: 2022-07-20 15:52 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் காட்டுக்குப்பம் பகுதியில் சாலையோரம் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் விபத்து அபாயம் உள்ளதாக தினத்தந்தி புகார் பெட்டியில் இன்று செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தினர். மேலும் அந்த பகுதியில் இனி வரும் காலங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்