சென்னை அம்பத்தூர் ஓ.டி பஸ் நிறுத்தத்தில் இருந்து சோழம்பேடு திருமுல்லைவாயில் ரெயில் நிலையம் வழியாக மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலுக்கு சிறப்பு இயக்கத்துக்கு சென்ற பஸ் தற்போது வரை இந்த வழித்தடத்தில் இயக்கபடவில்லை. இத்தடத்தில் மீண்டும் மினி பஸ்சினை இயக்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்து துறை ஆவண செய்ய வேண்டும்.