போக்குவரத்து நெரிசல்

Update: 2023-03-12 10:31 GMT

நாகை தோணித்துறை ரெயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. மேம்பால பணிகள் நடந்து வருவதால் அதற்கான மாற்று பாதையில் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்