போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-03-12 10:18 GMT
  • whatsapp icon

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் பொன்னவராயன்கோட்டை உள்ளது. இங்குள்ள சாலையின் இருபுறத்திலும் லாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுவது வாடிக்கையாகி உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் லாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்