கோவை விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகர் மெயின்ரோட்டில் பெட்ரோல் நிலையம் எதிரே சாலையில் செவ்வக வடிவில் இரும்பு பதிக்கப்பட்டு உள்ளது. அவை சரியாக பதிக்கப்படாததால், அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது கடும் அதிர்வு ஏற்படுகிறது. இது வாகனங்களில் செல்பவர்களை பதற செய்கிறது. மேலும் நோயாளிகள் கடும் அவதிப்படுகிறார்கள். இது தவிர இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே அவற்றை அகற்ற வேண்டும்.