தாவணகெரே மாவட்டம் மாலேபென்னூர் பகுதியில் இருந்து உக்டகாத்ரே செல்லும் சாலையில் துங்கபத்ரா ஆற்றில் தரைமட்ட பாலம் உள்ளது. மழை காலங்களில் அந்த பாலம் நீரில் மூழ்கிவிடும். இதனால் அந்த பாலம் மூலம் ஆற்றை கடக்க முடியாமல் அந்த பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.