திருவாரூர்-மன்னார்குடி சாலையில் பயணிகள் வசதிக்காக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தம் முறையான பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது. குறிப்பாக பஸ் நிறுத்தத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.மேலும், பஸ் நிறுத்தத்தில் முறையான வசதிகள் இல்லை. இதனால் பஸ் நிறுத்தத்தை பயணிகள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தை முறையாக பராமரிக்கவும், பயணிகள் பயன்பாட்டுக்குகொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?