நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்சாலை வழியாக தஞ்சைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களால் வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே உள்சாலை வழியாக பஸ் இயக்கப்படுகிறது. இதனால் திருாவரூர், தஞ்சை, தலைஞாயிறு பகுதிக்கு செல்லும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேதாரண்யம் உள்சாலை வழியாக தஞ்சைக்கு முறையான பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?