பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2023-02-26 07:44 GMT

தக்கலை மேட்டுக்கடை சந்திப்பில் இருந்து திருவிதாங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கேரளபுரம் பகுதியில் சாலையின் ஒருபுறம் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவனி சதீஷ், தக்கலை. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி