பெங்களூரு கெங்கேரி அருகே பெங்களூரு பல்கலைக்கழகம் செல்லும் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதை வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நடைபாதையில் வாகனங்கள் இயக்கப்படுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.