திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பகுதிகளில் சாலைகளிலுள்ள பாலங்கள் விவசாய தானியங்களை உலர வைக்கவும், வைக்கோல் உலர வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைவதுடன், விபத்துகளும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. மேலும் சாலைகளிலும், பாலங்களிலும் உலர வைக்கும் வைக்கோல் போன்றவை இலகு ரக வாகனங்களில் சிக்கி வாகனங்களையே செயலிழக்க வைத்து விடுகின்றன. மேலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.