போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படுமா?

Update: 2023-02-12 16:42 GMT

கிருஷ்ணகிரி நகரில் 5 ரோடு ரவுண்டானா மற்றும் ராயக்கோட்டை ஜங்ஷன், ஆவின் மேம்பாலம் ஆகிய சாலைகள் முக்கிய சாலை சந்திப்பு சாலைகளாக உள்ளன. இதில் 5 ரோடு ரவுண்டானா மற்றும் ராயக்கோட்டை ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் சிக்னல்கள் உள்ளன. ஆனால் ஆவின் மேம்பாலம் அருகில் சிக்னல் இல்லை. இதனால் சென்னை சாலையில் இருந்து வரும் வாகனங்கள், சேலம் சாலையில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்குள் வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் தாறுமாறாக செல்லும் நிலை உள்ளது. இதனால் அந்த மேம்பாலத்தில் தினமும் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு சிக்னல் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்