திருவாரூர் பழைய பஸ் நிலையம்-மயிலாடுதுறை செல்லும் பனகல் சாலையில் பாதாள சாக்கடை பள்ளம் உள்வாங்கி இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி'புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் இருந்த பள்ளத்தை சீரமைத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
படம் இல்லை