திருவாரூர் பழைய பஸ் நிலையத்துக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், பஸ்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் நிலையம் வாகன நிறுத்துமிடம் போல் காட்சி அளிக்கிறது.இவற்றால் பயணிகளும், பஸ் டிரைவர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?