கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

Update: 2023-02-12 13:49 GMT

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், காலதாமதமாக வரும் பஸ்கள் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சரியாக நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான நேரத்துக்கு திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்