ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.காவனூர் கிராமத்தில் இருந்து பரமக்குடிக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த வழியாக பயணிக்கம் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?