புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி கிராமங்கள் சூழ்ந்த நகர பகுதியாகும். தஞ்சாவூர் மாவட்ட எல்லை பகுதியில் உள்ளதால் வியாபாரிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை வழிதடத்தில் இரவு நேரங்களில் வேலை முடிந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் கறம்பக்குடியில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் புதுக்கோட்டை, பட்டுக்கோட்டைக்கு செல்லும் தனியார் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே உரிமம் பெற்ற நேரத்தில் தனியார் பஸ்களை இயங்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.