கிருஷ்ணகிரி நகரில் இருந்து சென்னை சாலை சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தன. இதனால் உயிர் இழப்புகள் அதிகமாக இருந்து வந்தன. அந்த பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இந்த நிலையில் சமீப காலகமாக அங்கு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பணிகள் நின்றதற்கான காரணமும் தெரியவில்லை. இதனால் சென்னை சாலையில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்குள் வரும் வாகனங்கள் திருவண்ணாமலை பைபாஸ் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் மேம்பால கட்டுமான பணி நடக்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே மேம்பால கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.