தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலையாரித்தெரு,பழனியப்பன் தெரு,சின்னையா தெரு,பெரிய தெரு,வடசேரி முக்கம், கைகாட்டி பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்சுகளும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு முறையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.