சத்தியமங்கலத்தில் இருந்து குன்னத்தூர், ஊத்துக்குளி, காங்கேயம் செல்வதற்கு பஸ் வசதி இல்லை. காங்கேயம் செல்லவேண்டும் என்றால் திருப்பூர் சென்று அங்கிருந்து பஸ் மாறி செல்ல வேண்டியது உள்ளது. எனவே சத்தியமங்கலத்தில் இருந்து குருமந்தூர், கொளப்பலூர், குன்னத்தூர், செங்கப்பள்ளி, ஊத்துக்குளி, சிவன்மலை வழியாக காங்கேயத்துக்கு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.