கிருஷ்ணகிரியில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காவேரிப்பட்டணம், பர்கூர், போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் 5 ரோடு ரவுண்டானா அருகில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. அவ்வாறு நிறுத்தப்படும் பஸ்கள் நீண்ட நேரமாக சாலைகளில் நிற்பதால் பிற வாகனங்கள் போக்குவரத்து நிலை ஏற்படுகிறது. எனவே ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் பஸ்களை நிறுத்தி உடனடியாக பயணிகளை ஏற்றி செல்ல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கண்டக்டர், டிரைவர்களை அறிவுறுத்த வேண்டும்.
-சந்தோஷ், கிருஷ்ணகிரி.