நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதிபெரிய கடைதெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் அதிகளவில் சுற்றிதிரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் வாகன ஓட்டிகள் மாடுகள் மீதி மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், அவற்றால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?