திருவாரூர்-கும்பகோணம் சாலையில் பவித்ரமாணிக்கம் பஸ் நிறுத்தம் உள்ளது. இது முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. பஸ் நிறுத்தத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பயணிகள் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பஸ் நிறுத்ததை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.