புகழ்பெற்ற சுற்றுலா தலமான சிதறால் மலை கோவிலிருந்து கன்னியாகுமரிக்கு தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த பஸ் மூலம் சிதறால் மலைக்கோவிலுக்கு வந்து பார்வையிட்டு சென்றனர். கடந்த 4 ஆண்டுகளாக அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அந்த பகுதி மக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஜாஸ்பர் ஜெபசிங், துண்டத்தாறாவிளை.