வேகத்தடை தேவை

Update: 2023-01-25 05:17 GMT

அந்தியூர் தேர் வீதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் வடபுறத்தில் உள்ள சாலையில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 3 சாலைகளிலும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் ஒரு குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. எனவே பெரிய விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படும் முன் மீதம் உள்ள 3 சாலைகளிலும் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி