போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-19 12:20 GMT

சிவகங்கை மாவட்டம் வளர்ச்சி அடைந்து வரும் மாவட்டமாக உருவாகி வருகிறது. இதனால் மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்கள் போன்றவை அதிக அளவில் கட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டிடங்கள் கட்டுவதற்காக மண், செங்கல், ஜல்லி போன்றவை சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சாலை ஆக்கிரமிப்பால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சிரமப்படுகிறார்கள். மேலும் கட்டிட தூசியும் அதிக அளவில் காற்றில் பரவுகிறது. குறிப்பாக சிவன்கோவில் தெருவில் அதிக அளவில் இவ்வாறு கொட்டப்படுகிறது. அனுமதியில்லாமல் சாலையில் கொட்டப்படும் கட்டிட பொருட்களை அதிகாரிகள் கவனித்து அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்