திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் துவங்கும் மற்றும் விடும் நேரங்களில் மாணவர்களுக்கு போதிய டவுன்பஸ் வசதி இல்லாத காரணத்தால் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். எனவே அவ்வாறான நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கிடவும், மாணவர்களுக்கென சிறப்பு பஸ் வசதியோ அல்லது பள்ளி நேரங்களை மாற்றி அமைத்தோ அவர்களது பயணம் பாதுகாப்பாக அமைவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.