பஸ் வசதி தேவை

Update: 2023-01-04 18:11 GMT
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆ.மரூர், சேதுவராயன் குப்பம், மாளிகைமேடு, பா.கொத்தனூர், மேலக்குறிச்சி, கீழக்குறிச்சி, காட்டுமைலூர் ஆகிய கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் மேற்கண்ட கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்