கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் பஸ் நிலையத்திற்கு உள்ளே பெரும்பாலான டவுன் பஸ்கள் வருவதில்லை. மாறாக திருப்பத்தூர் சாலை, தர்மபுரி சாலை, கிருஷ்ணகிரி சாலையில் நின்று பயணிகளை ஏற்றியும் இறக்கியும் வருகின்றன. இதனால் அந்த பகுதியில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி டவுன் பஸ்களை பஸ்நிலையத்திற்குள் வருவதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.