nதிண்டுக்கல்-நத்தம் சாலையில் விளக்குரோடு உப்புக்குளம் பகுதியில் சாலையோரத்தில் திறந்தநிலையில் கிணறு உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றை மூட வேண்டும் அல்லது கிணற்றை சுற்றி தடுப்புவேலி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.