விருத்தசலத்தில் இருந்து கோட்டேரி, காட்டுக்கூடலூர், முத்தாண்டிக்குப்பம், கொள்ளுக்காரன் குட்டை, குள்ளஞ்சாவடி போன்ற ஊர்களின் வழியாக இயக்கப்பட்ட தடம் எண் 263 பஸ், கடந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.