நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் விருதுநகரின் நுழைவு மற்றும் முக்கிய பகுதிகளில் புகைப்படத்துடன் கூடிய வழிகாட்டி பலகைகள் பிரமாண்ட அளவில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் ஏராளமான எழுத்துப் பிழைகள் உள்ளன. இந்த எழுத்துப்பிழைகளால் தமிழ் அர்த்தமே மாறிப்போகக்கூடிய சூழ்நிலை உள்ளது. மேலும் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் வழிமாறும் நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.