போக்குவரத்து நெரிசல்

Update: 2022-12-18 13:18 GMT

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த சாலைகளில் 2 புறமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக நீண்ட காலமாக பழுதான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலையோரமாக பொதுமக்களும் நடந்து செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். 

மேலும் செய்திகள்