அதி வேகமாக செல்லும் வாகனங்கள்

Update: 2022-12-18 12:54 GMT

நாகையில் இருந்து நாகூர் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ் வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக காலை நேரத்தில் ஏராளமானோர் பணி நிமித்தமாக இந்த சாலையில் பயணிக்கின்றனர். இதனால் இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்