நீடாமங்கலத்தில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ரெயில் நிலையம் எப்போதும் பொதுமக்கள் கூட்டத்துடன் காணப்படும். இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் 2 மற்றும் 3-வது நடைமேடையில் நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள், ரெயிலில் ஏறும் போதும், இறங்கும் போதும் தட்டுதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன் நடைமேடை பாதையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.