ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு தினமும் எண்ணற்ற பக்தர்கள் சாமி கும்பிட வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களின் வாகனங்களை சாலையில் இஷ்டத்திற்கு நிறுத்துகின்றனர். இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.